உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 3 பேர் தற்கொலை மருமகளுக்கு காப்பு

3 பேர் தற்கொலை மருமகளுக்கு காப்பு

3 பேர் தற்கொலைமருமகளுக்கு 'காப்பு'எருமப்பட்டி, டிச. 25-எருமப்பட்டி யூனியன், அ.வாழவந்தி கிராமத்தை சேர்ந்தவர் சுரேந்திரன், 25; இவருக்கு கடந்த, 5 மாதத்திற்கு முன் வேட்டாம்பாடியை சேர்ந்த சினேகா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. சில நாட்களுக்கு முன் கணவன், மனைவியிடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் கோபித்துக்கொண்டு, சினேகா தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதை அவமானமாக நினைத்த சுரேந்திரன், தந்தை செல்வராஜ், தாய் பூங்கொடி ஆகியோர், கடந்த, 14ல் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சுரேந்திரன் குடும்பத்தினர் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த, சினேகாவை எருமப்பட்டி போலீசார், நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி