உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலர்கள் மோதி 3 பேர் படுகாயம்

டூவீலர்கள் மோதி 3 பேர் படுகாயம்

குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, இரண்டு டூவீலர்கள் மோதிய விபத்தில், மூவர் பலத்த காயமடைந்தனர். பவானி அருகே, லட்சுமி நகரை சேர்ந்த தம்பதியர் அஜித்குமார், 30, மகேஸ்வரி, 25; கூலித்தொழிலாளர்கள். இவர்கள், நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு வெப்படை சாலையில், 'சுசூகி அக்சஸ்' டூவீலரில் சென்றனர். அப்போது எதிரே, அந்தியூர் சென்னம்பட்டியை சேர்ந்த முருகேசன், 35, என்பவர் ஓட்டிவந்த, 'பேஷன் புரோ' டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், மூவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை