மேலும் செய்திகள்
6 யூனிட் மணல் கடத்தல் லாரி டிரைவர் கைது
08-Oct-2025
புதுச்சத்திரம் நாமக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை புவியியலாளர் ஜெகதீசன் தலைமையில், கனமத்துறை தனி ஆர்.ஐ., உள்ளிட்டோர், புதுச்சத்திரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட, நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலை புதன்சந்தை மேம்பாலத்தில், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தினர். அவர்களை கண்டதும், டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடி தலைமறைவானார். தொடர்ந்து, லாரியை சோதனை செய்ததில், சட்டத்துக்கு விரோதமாக, மூன்று யூனிட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. டிப்பர் லாரியை மணலுடன் பறிமுதல் செய்து, புதுச்சத்திரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, டிப்பர் லாரி உரிமையாளர், தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
08-Oct-2025