உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பணம் கொடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் ஒரே நாடு ஒரே தேர்-தலை எதிர்க்கின்றனர்

பணம் கொடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் ஒரே நாடு ஒரே தேர்-தலை எதிர்க்கின்றனர்

ராசிபுரம்: ''பணம் கொடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் தான், ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கின்றனர்,'' என, பா.ஜ., மாநில துணைத்த-லைவர் ராமலிங்கம் கூறினார். பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி, நாடு முழுதும், பா.ஜ.,வினர் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, ராசிபுரம் அருகே, மருத்துவ முகாம் நடந்தது. பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், முகாமை தொடங்கி வைத்தார்.தொடர்ந்து அவர் கூறியதாவது:நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. நாடு முழுவதும், 6 மாதத்திற்கு ஒரு தேர்தல் நடக்கிறது. இதில், தேர்த-லுக்கு முன், 3 மாதமும் பின், 3 மாதமும் பணிகள் முடங்குகின்-றன. தேர்தலுக்காக, நாட்டின் வருவாயில், 20 சதவீதம் வரை செலவாகிறது. பணம் கொடுத்து ஆட்சிக்கு வரும் கட்சிகள் தான், ஒரே நாடு, ஒரே தேர்தலை எதிர்க்கின்றனர். பொதுமக்களின் ஆத-ரவோடு ஆட்சிக்கு வருபவர்கள், இதனை ஏற்பார்கள். நாட்டின் வளர்ச்சிக்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் மிக மிக அவசியம். இதை செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. அதை தீர்த்து வைத்து, பா.ஜ., ஒரே நாடு, ஒரே தேர்தலை செயல்படுத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை