அரசு மேல்நிலைப்பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் வழங்கிய 40 நாற்காலிகள்
குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு, முன்னாள் மாணவர்கள் சார்பில், 40 நாற்காலிகள் வழங்கும் விழா, தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமையில் நடந்தது. இதையொட்டி பேச்சு, கட்டுரை, ஓவியம், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், கேடயங்கள் பரிசாக வழங்கப்பட்டன.