நாமக்கல்லில் 45 சிறப்பு பஸ்கள் இயக்கம்
நாமக்கல்: பொங்கல் பண்டிகையையொட்டி, நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து, சென்னை, ஈரோடு, திருச்சி, துறையூர் பகுதிகளுக்கு, 45 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.தமிழகத்தில், பொங்கல் பண்டிகை நாளை (ஜன., 13)போகி பண்டிகையுடன் துவங்குகிறது. மறுநாள் (ஜன., 14), சூரியன் பொங்கல், வரும், 15ல், மாட்டுப்பொங்கல், 16ல், காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கலை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக, பலரும் ஊர் திரும்புவது வழக்கம். அதற்-காக, பள்ளி, கல்லுாரி, அரசின் அனைத்து துறைகளுக்கும், வரும், 14 முதல், ஆறு நாட்களுக்கு, அரசு தொடர் விடுமுறை அறிவித்-துள்ளது.ஆனால், சில தனியார் பள்ளி மற்றும் கல்லுாரிகளில், நேற்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால், நேற்று இரவு முதலே பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதையடுத்து, நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில், மக்கள் கூட்டம் அலைமோதியது.குறிப்பாக நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து, நேற்று இரவு சேலம், ஈரோடு, மதுரை போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்-களில் பயணிகள் முண்டியடித்து ஏறியதை காணமுடிந்தது. 'பொங்கலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில், 45 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு, 15 பஸ்கள், ஈரோடு, துறையூர் மற்றும் திருச்சி போன்ற பகுதிக-ளுக்கு, தலா, 10 பஸ்கள் இயக்கப்படுகிறது' என, போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர்.