உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.4.50 லட்சத்திற்குகொப்பரை வர்த்தகம்

ரூ.4.50 லட்சத்திற்குகொப்பரை வர்த்தகம்

ரூ.4.50 லட்சத்திற்குகொப்பரை வர்த்தகம்எலச்சிபாளையம்:திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, கொப்பரை தேங்காய் ஏலம் நடக்கிறது.அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில் மாமரப்பட்டி, மேல்முகம், மங்களம், காளிப்பட்டி, பள்ளக்குழி, ராமாபுரம், பருத்திப்பள்ளி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள், 60 கிலோ எடைகொண்ட, 60 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இதில், முதல் தரம் கிலோ, 160.75 ரூபாய் முதல், 177.70 ரூபாய்; இரண்டாம் தரம், 135 ரூபாய் முதல், 143.75 ரூபாய் என, மொத்தம், 4.50 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வரும், 11ல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை