ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் 4.57 லட்சம் பேர் தி.மு.க.,வில் இணைப்பு
நாமக்கல்:'நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், 'ஓரணியில் தமிழகம்' இயக்கத்தில், 4 லட்சத்து, 57,862 பேர் தி.மு.க.,வில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்' என, மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் கூறினார்.இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், கடந்த ஜூலை, 1ல், ஓரணியில் தமிழகம் இயக்கத்தை, தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் துவக்கி வைத்தார். ஜூலை, 2 முதல், தமிழகமெங்கும் ஓட்டுச்சாவடி வாரியாக, 'ஓரணியில் தமிழகம் இயக்கம்' குறித்து பொதுமக்களிடம் விளக்கி கூறப்பட்டு வருகிறது.நாமக்கல் தொகுதியில், ஒரு லட்சத்து, 51,838 பேர் இணைந்துள்ளனர். இது, மொத்த வாக்காளர்களில், 57 சதவீதம். சேந்தமங்கலத்தில், ஒரு லட்சத்து, 59,252 பேர் இணைந்துள்ளனர். இது மொத்தம் வாக்காளர்களில், 64.7 சதவீதம். ராசிபுரத்தில், ஒரு லட்சத்து, 46,780 பேர் இணைந்துள்ளனர்.இது மொத்த வாக்காளர்களில், 64 சதவீதம். கிழக்கு மாவட்டத்தில், மூன்று சட்டசபை தொகுதிகளிலும், 4 லட்சத்து, 57,862 பேர், தி.மு.க.,வில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். உறுப்பினர் சேர்க்கையில், மாநில அளவில், நாமக்கல் கிழக்கு மாவட்டம், முதல் ஐந்து இடங்களில் இடம்பெற்றுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து, பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி ஓரணியில் தமிழகம் இயக்கத்தின் கீழ் தி.மு.க.,வில் உறுப்பினர்களாக இணைந்தவர்கள், மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். நாமக்கல் மாநகராட்சி துணை மேயர் பூபதி உள்பட பலர் பங்கேற்றனர்.