உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முதல்வர் கோப்பை விளையாட்டு 47,253 பேர் பதிவு: அமைச்சர் தகவல்

முதல்வர் கோப்பை விளையாட்டு 47,253 பேர் பதிவு: அமைச்சர் தகவல்

நாமக்கல், ''நாமக்கல் மாவட்டத்தில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில், 47,253 பேர் பதிவு செய்துள்ளனர்,'' என, தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி துவக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். எம்.பி., மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், போட்டிகளை துவக்கி வைத்து பேசியதாவது: பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என, ஐந்து பிரிவுகளில், 25 விளையாட்டு, மண்டல அளவில், ஏழு விளையாட்டு, மாநில அளவில், 37 வகையான போட்டிகளும் நடத்தப்படுகிறது.நாமக்கல் மாவட்டத்தில், 2024ல், 31,566 பேரும், நடப்பு ஆண்டு, 47,253 பேரும் பதிவு செய்துள்ளனர். 2024ம் ஆண்டை காட்டிலும், இந்தாண்டு, 15,687 பேர் அதிகமாக பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.துணை மேயர் பூபதி, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் கோகிலா, அரசு துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ