5 உயர் மின்கோபுர விளக்கு எம்.பி., திறந்து வைப்பு
நாமக்கல் நாமக்கல் கொ.ம.தே.க.,-எம்.பி., மாதேஸ்வரன், தொகுதி மேம்பாட்டு நிதி, 17.50 லட்சம் ரூபாய் மதிப்பில், பொரசபாளையம், மஞ்சநாய்க்கனுார், புள்ளகுமரன்பாளையம், நாமக்கல் அரசு கால்நடை மருத்துவ கல்லுாரி, வெள்ளாளப்பட்டி (ஆண்டாபுரம்) ஆகிய இடங்களில், உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார். அதை தொடர்ந்து, உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. அதை தொடர்ந்து, எம்.பி., மாதேஸ்வரன், மின் விளக்குகளை திறந்து வைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.கொ.ம.தே.க., மாநில ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் மணி, நாமக்கல் மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் சசிகுமார், அவை தலைவர் பழனிமலை, நாமக்கல் சட்டசபை தொகுதி மகளிரணி செயலாளர் பிரேமலதா, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.