5 சாய ஆலைகளில் ரகசிய குழாய் அகற்றம்
பள்ளிப்பாளையம், ஜன. 2-பள்ளிப்பாளையம் அருகே, சமயசங்கிலி, ஆவத்திபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சாய ஆலைகளில், சாயக்கழிவு நீரை வெளியேற்ற ரகசிய குழாய் அமைத்திருப்பதாக, கலெக்டருக்கு புகார் சென்றது.இதையடுத்து அவரது உத்தரவுப்படி, கடந்த மாதம் சாய ஆலைகளில் வருவாய்த்துறை, நீர் வளத்துறை, மின்வாரியம், பள்ளிப்பாளையம் யூனியன் மற்றும் பஞ்., அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.இதையடுத்து, நேற்று முன்தினம், சமயசங்கிலி வி.ஏ.ஓ., தியாகராஜன், வருவாய்த்துறை அதிகாரிகள், சமயசங்கிலி பகுதியில், 5 சாய ஆலைகளில் அமைக்கப்பட்டிருந்த ரகசிய குழாய்களை பொக்லைன் இயந்திரம் மூலம் உடைத்து அகற்றினர்.