ஏரியில் 5,000 மீன் குஞ்சுகள்
ஏரியில் 5,000 மீன் குஞ்சுகள் குமாரபாளையம், நவ. 6-குமாரபாளையம் அருகே உள்ள ஏரியில், பொது மக்கள் சார்பில், 5,000 மீன் குஞ்சுகள் விடப்பட்டன. இதுகுறித்து, விவசாயி விஸ்வநாதன் கூறுகையில், ''குமாரபாளையம் அருகே, தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம் பகுதியில் உள்ள வேளாங்காடு ஏரியில், ஊர் பொதுமக்கள் சார்பில், 5,000 மீன் குஞ்சுகள் விடப்பட்டன. இதற்கு தேவையான உணவுகள் ஏரியில் போடப்பட்டுள்ளன. குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏரியில் மீன் குஞ்சுகளுக்கு உணவு போடப்படும். 6 மாத காலத்தில், இந்த மீன் குஞ்சுகள் வளர்ந்து பெரிய அளவில் காணப்படும். இந்த மீன்களை பிடித்து விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானம், கோவில் திருவிழா, ஊர் பொதுப்பணிகளுக்கு செலவிடப்படும்,'' என்றார்.