உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 56 டன் காய்கறி ரூ.21.44 லட்சத்திற்கு விற்பனை

56 டன் காய்கறி ரூ.21.44 லட்சத்திற்கு விற்பனை

நாமக்கல்: நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 56 டன் காய்கறிகள், பழங்கள், 21.44 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.நாமக்கல் கோட்டை மெயின் சாலையில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினமும், அதிகாலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்களும் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், அதிகளவில் வாடிக்கையாளர்கள் வந்து, தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.தற்போது, மாசி மாதம் முகூர்த்த சீசன் துவங்கியுள்ளது. இதனால் நேற்று, வழக்கத்தை விட உழவர் சந்தையில் விறுவிறுப்பாக வியாபாரம் நடந்தது. மொத்தம், 222 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறி, பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அதன்படி, 47,885 கிலோ காய்கறிகள், 8,180 கிலோ பழங்கள், 25 கிலோ பூக்கள் என மொத்தம், 56,090 கிலோ விளைபொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அவற்றை, 11,218 பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதன் மூலம், 21 லட்சத்து, 44,410 ரூபாய்க்கு விற்பனையானது.தக்காளி ஒரு கிலோ, 10 ரூபாய், கத்தரி, 25, வெண்டை, 40, புடலங்காய், 48, பீர்க்கங்காய், 46, பாகற்காய், 30, சின்ன வெங்காயம், 42, பெரிய வெங்காயம், 30, இஞ்சி, 55 ரூபாய், பூண்டு, 110 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.5 டன் தக்காளி விற்பனைராசிபுரம் உழவர் சந்தைக்கு, விடுமுறை தினமான நேற்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. நேற்று ஒரே நாளில், 231 விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்க கொண்டு வந்திருந்தனர். 26,765 கிலோ காய்கறி, 7,050 கிலோ பழங்கள், 420 கிலோ பூக்கள் என மொத்தம், 34,235 கிலோ காய்கறி, பழங்கள் விற்பனையாகின. இதன் மொத்த மதிப்பு, 12 லட்சம் ரூபாய். 6,582 பேர் உழவர் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றனர்.நேற்று, நல்ல தரமான தக்காளி கிலோ, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மொத்தம், 5,540 கிலோ தக்காளி வரத்தானது. அது, 55,400 ரூபாய்க்கு விற்றது. விலை குறைவாக இருந்ததால் பொதுமக்கள் அதிகமாக வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ