உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மோகனுார் காவிரி ஆற்றில் 64 விநாயகர் சிலைகள் கரைப்பு

மோகனுார் காவிரி ஆற்றில் 64 விநாயகர் சிலைகள் கரைப்பு

மோகனுார்: விநாயகர் சதுர்த்தியையொட்டி, நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து வணங்கி வந்தனர். அதை தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் சுவாமி சிலைகளை வாகனங்களில் எடுத்துக்கொண்டு, மோகனுார் காவிரி ஆற்றுக்கு சென்றனர்.அங்கு, பூஜை செய்து, காவிரி ஆற்றில் கரைத்தனர். நேற்று காலை முதல் மாலை வரை, ராசிபுரம், புதுச்சத்திரம், சேந்தமங்கலம், நாமக்கல், சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி, அன்னதானப்பட்டி, மல்லுார், சீலநாயக்கன்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், 64 சிலைகளை ஆற்றில் கரைத்தனர். நாமக்கல் டி.எஸ்.பி., ஆனந்தராஜ், மோகனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் ஆகியோர் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை