மேலும் செய்திகள்
தெருநாய் கடித்து 15 ஆடுகள் பலி
04-May-2025
எருமப்பட்டி,எருமப்பட்டி யூனியன், முட்டாஞ்செட்டி பஞ்., சேர்ந்தவர் ரங்கராஜன், 55; விவசாயி. இவர், 60க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.தினமும் காலை, மாலையில் மேய்ச்சலுக்கு கொண்டுச்சென்று விட்டு, இரவில் பழைய செக்குமரம் என்ற இடத்தில் பட்டியில் அடைத்து வைப்பது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு, ரங்கராஜன் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டுசென்றுவிட்டு, பட்டியில் அடைத்து வைத்துள்ளார்.இதை மோப்பம் பிடித்த, 5க்கும் மேற்பட்ட வெறிநாய்கள், அதிகாலை பட்டியில் புகுந்து, ஏழு ஆடுகளை கடித்து குதறின.சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், நாய்கள் கூட்டமாக ஓடியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதில், ஏழு ஆடுகள் பட்டியிலேயே உயிரிழந்தது. கால்நடைத்துறையினர் உயிரிழந்த ஆடுகளை பார்வையிட்டனர். இறந்த ஆடுகளின் மதிப்பு, 50,000 ரூபாய் என்பதால், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர்.
04-May-2025