உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தேசிய ஊரக வேலையின் போது 8 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

தேசிய ஊரக வேலையின் போது 8 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

தேசிய ஊரக வேலையின் போது8 அடி நீள மலைப்பாம்பு மீட்புசேந்தமங்கலம், டிச. 26-சேந்தமங்கலம், உத்திரகிடிக்காவல் பஞ்., கொல்லிமலை சாலையில் உள்ள நாச்சிப்புதுார் ஏரியின் பின் பகுதியில் வேர் புளியமர ஓடை உள்ளது. இந்த ஓடையில், தேசிய ஊரக பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல், இந்த ஓடையில், 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வந்தனர். அதன் அருகே, 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று, கொல்லிமலையில் இருந்து வந்த காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு அடிவார பகுதியில் உள்ள ஓடையில் இறையை விழுங்கியவாறு செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், தவித்துக்கொண்டிருந்த மலைப்பாம்பை மீட்டு, கொல்லிமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை