மேலும் செய்திகள்
ரத்தத்தானம் முகாம்
05-Jul-2025
நாமக்கல்:உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி தலைமை வகித்து, 8 தன்னார்வ ரத்ததான கொடையாளர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். 2024ம் ஆண்டில் 3 முறை ரத்ததானம் செய்த ஆண் கொடையாளர்கள், 2 முறை ரத்ததானம் செய்த பெண் கொடையாளர்கள் உட்பட, 38 தன்னார்வ ரத்ததான கொடையாளர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும், 73 முறை ரத்த தானம் வழங்கிய டாக்டர் கண்ணனுக்கு, வாழ்நாள் தன்னார்வ ரத்ததான கொடையாளர் நினைவு பரிசு வழங்கப்பட்டது.நாமக்கல் மாவட்டத்தில், அரசு ரத்த மையங்களின் மூலமாக, 2024ம் ஆண்டில் மொத்தம், 8,850 யூனிட் தானமாக பெறப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ரத்த மையத்தில் மட்டும் 5,393 யூனிட் தானமாக பெறப்பட்டுள்ளது. இதில், 3,059 யூனிட் கர்ப்பிணி தாய்மார்களுக்கும், 597 யூனிட் விபத்து மற்றும் அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை, பொது மருத்துவம் போன்ற மற்ற பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் சாந்தா அருள்மொழி, இணை இயக்குனர் ராஜ்மோகன், மாவட்ட சுகாதார அலுவலர் பூங்கொடி, மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் அன்புமலர், மாவட்ட திட்ட மேலாளர் செல்வகுமார் உள்ளிட்ட ரத்த மைய மருத்துவ அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
05-Jul-2025