மேலும் செய்திகள்
பெற்றோருடன் புது மாப்பிள்ளை தற்கொலை
16-Dec-2024
லாட்டரி விற்றவர் கைது
04-Dec-2024
எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், பெற்-றோருடன் மகன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி, அ.வாழவந்தி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி செல்வராஜ், 50; இவரின் மனைவி பூங்-கொடி, 47; இவர்களின் மகன் சுரேந்திரன், 25; ஐந்து மாதத்துக்கு முன் வேட்டாம்பாடியை சேர்ந்த சினேகா, 22, என்ற பெண்-ணுடன், சுரேந்திரனுக்கு திருமணம் நடந்தது. சில நாட்களாக தம்-பதி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்-தினம் மாலை கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் கோபமடைந்த சினேகா, வேட்டாம்பாடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் சுரேந்திரன், அவரது பெற்றோர் மனவேதனை அடைந்தனர். இந்நிலையில் நேற்று காலை வெகுநேரமாகியும், மூன்று பேரும் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. சந்தேகமடைந்த அக்கம்-பக்கத்தினர் சென்று பார்த்தபோது, துாக்கில் சடலமாக தொங்கி-யதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தகவலின்படி சென்ற எருமப்பட்டி போலீசார், மூவரின் சடலங்களையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால், பெற்றோருடன் மகன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது. அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
16-Dec-2024
04-Dec-2024