பறிமுதல் செய்த பஞ்சாயத்து டிராக்டருக்கு ரூ,21,000 அபராதம்
பறிமுதல் செய்த பஞ்சாயத்துடிராக்டருக்கு ரூ,21,000 அபராதம்ப.வேலுார், அக். 17--டிராக்டரில் இருந்து தவறி விழுந்து, துாய்மை பணியாளர் இறந்தது தொடர்பாக, டிராக்டர் உரிமையாளருக்கு, 21 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலராக சோமசுந்தரம் உள்ளார். 18 வார்டுகள் உள்ளது குப்பை சேகரிக்க மூன்று மேஸ்திரிகள், 80 துாய்மை பணியாளர்கள் உள்ளனர். கடந்த, 8 காலை 9:00 மணிக்கு திடுமல கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சாமிநாதன், 36, என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் ஐந்து பணியாளர்களுடன் குப்பை சேகரிக்கும் பணியில், டிரைவர் சுப்பிரமணி ஈடுபட்டிருந்தார்.அப்போது டிராக்டரில் அமர்ந்து சென்ற துாய்மை பணியாளர் சுப்பிரமணி, 48, தவறி விழுந்து உயிரிழந்தார். ப.வேலுார் போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்த பின், அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து உரிமையாளர் சாமிநாதன் மீண்டும் டிராக்டரை டவுன் பஞ்சாயத்துக்கு வாடகைக்கு விட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து, ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் டிராக்டரை கொண்டு வந்து நிறுத்தினர்.இந்நிலையில், பரமத்தி ஆர்.டி.ஓ., சரவணன் விபத்தில் சிக்கி சர்ச்சைக்கு உள்ளான டிராக்டரை ஆய்வுக்கு கொண்டு வருமாறு உத்தரவிட்டார் ஆய்வில், டிராக்டர் ஓட்டுனருக்கு டிரைவிங் லைசென்ஸ் இல்லாததும், போக்குவரத்து விதிமுறைகளை மீறி டிராக்டரில் ஆட்களை ஏற்றி சென்றதும், விவசாயத்துக்கு என பதிவு செய்துவிட்டு வாடகைக்கு விடப்பட்டது தெரிய வந்தது இதனால் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், விபத்தில் சிக்கிய ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து தனியார் டிராக்டரை, நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் ஆய்வு செய்து, உரிமையாளர் சாமிநாதனுக்கு, 21 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.