மேலும் செய்திகள்
21ல் தி.மு.க., மாணவர் அணிக்கு நேர்காணல்
18-Sep-2024
நாமக்கல்: கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், மாணவரணிக்கான அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல், நாமக்கல் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் அறிவுரைப்படி நடந்த நேர்காணலில், மாவட்டத்திற்கான ஒன்றிய, நகர, டவுன் பஞ்., பகுதிகளில், மாணவர் அணிக்கு விண்ணப்பித்த அனைவரும் கலந்து கொண்டனர்.மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சத்தியசீலன் வரவேற்றார். மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, நகர செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மாணவர் அணி இணை செயலாளர் மோகன், துணை செயலாளர்கள் தமிழரசன், பொன்ராஜ், கோகுல், ஆனந்த், தமிழ், அமுதரசன் ஆகியோர் முன்னிட்டு நேர்காணலை நடத்தினர்.நேர்காணலில், கட்சிக்கு ஆற்றிய தொண்டு, கட்சியின் கொள்கை, கோட்பாடு, மக்களுக்கு ஆற்றும் பணி உள்ளிட்டவை குறித்து கேட்கப்பட்டது. அதில், நாமக்கல் கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட, ஒன்றிய, நகர, டவுன் பஞ்., மாணவர் அணி பொறுப்பிற்கு விண்ணப்பித்த கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
18-Sep-2024