குடிமகன்களின் கூடாரமாக மாறிய பயணிகள் நிழற்கூடம்
குடிமகன்களின் கூடாரமாகமாறிய பயணிகள் நிழற்கூடம்பள்ளிப்பாளையம், செப். 28-காவிரி பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள நிழற்கூடம், குடிமகன்களின் கூடாரமாக மாறியுள்ளது.பள்ளிப்பாளையம் அருகே, காவிரி பஸ் ஸ்டாப் பகுதியில் இருக்கை வசதியுடன் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.மாணவ, மாணவிகள், பொதுமக்கள், பஸ் வரும் வரை நிழற்கூடத்தில் காத்திருப்பர். ஆனால், கடந்த சில மாதங்களாக நிழற்கூடம், குடிமகன்களின் கூடாரமாக மாறிவிட்டது. இரவு, பகல் என எல்லா நேரத்திலும் நிழற்கூடத்தில் குடிமகன்கள் இருந்து கொண்டே உள்ளனர். போதை ஏறியவுடன் இருக்கையில் படுத்து கொள்கின்றனர்.இதனால் பயணிகள் சாலையோரத்தில் பஸ்காக நிற்கின்றனர். நிழற்கூடம் இருந்தும் பயனில்லாமல் காணப்படுகிறது. பெண்கள் நிழற்கூடம் பக்கமே செல்வதில்லை. நிழற்கூடத்தில் குடியிருக்கும், குடிமகன்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.