சேந்தமங்கலத்தில் வேரோடு சாய்ந்த புளியமரம்
சேந்தமங்கலம் :தொடர் மழை எதிரொலியால், 150 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த புளியமரம் வேரோடு சாய்ந்தது.சேந்தமங்கலம் அடுத்து காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சியில் உள்ள, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில், சாலை ஓரங்களில் நிறைய புளிய மரங்கள் உள்ளன. இந்த மரங்களின் வயது, 150 ஆண்டுகளுக்கும் மேலானது.சேந்தமங்கலம் மற்றும் காளப்பநாயக்கன்பட்டி சுற்று வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த இரண்டு நாட்களாக, இரவு முழுவதும் மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் சாலையோரத்தில் இருந்த புளியமரம் ஒன்று, நேற்று முன்தினம் இரவு வேரோடு சாய்ந்து அருகில் இருந்த கட்டடத்தின் மீது சாய்ந்து நின்றது. அங்கு யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையறிந்த நெடுஞ்சாலை துறை பணியாளர்கள், விரைந்து சென்று வேரோடு சாய்ந்து இருந்த புளிய மரத்தை வெட்டி அகற்றினர்.