மேலும் செய்திகள்
மரத்தில் சரக்கு ஆட்டோ மோதி மூன்று பேர் பலி
31-Oct-2025
நாமக்கல்: வீட்டுக்குள் போதையில் தவறி விழுந்த, சரக்கு ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார்.நாமக்கல் அடுத்த கிருஷ்ணாபுரம் எஸ்.எஸ்., ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி, 63. சரக்கு ஆட்டோ டிரைவரான இவரது மனைவி செல்வி, 25, ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்-றுவிட்டார். அதையடுத்து, தனது தாயாருடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், 8 ஆண்டுகளுக்கு முன், அவரது தாயாரும் இறந்துவிட்டார். தொடர்ந்து, அங்கேயே வீடு கட்டி வசித்து வந்தார்.இதற்கிடையில், மதுபோதைக்கு அடியான அவர், தனது தங்கை வளர்மதியின் மகள் சத்யாவிடம், செலவுக்கு பணம் வாங்கி போதையில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், இரண்டு நாட்களாக வெளியே வரவில்லை. அதனால், அவரது மொபைல் போனுக்கு பலமுறை தொடர்பு கொண்டும் எடுக்கவில்லை. சந்தேகமடைந்த தங்கையின் மகன்கள், நேற்று காலை, 8:00 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தனர்.அப்போது, வீடு உட்புறமாக தாழிடப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சமையல் அறையில், சுப்ரமணி இறந்த நிலையில் கிடந்துள்ளார். தகவல் அறிந்த நல்லி-பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், போதையில் கீழே தவறி விழுந்ததில் இறந்தி-ருக்கலாம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
31-Oct-2025