உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புரட்டாசி முதல் ஞாயிறு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்

புரட்டாசி முதல் ஞாயிறு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்

நாமக்கல்:நாமக்கல் நகரின் மையத்தில், நரசிம்மர், நாமகிரி தாயார் கோவில் எதிரே ஒரே கல்லில், 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆஞ்சநேயர் ஜெயந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கில வருட பிறப்பு நாட்கள், தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படும்.அதன்படி, நேற்று புரட்டாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு காலை, 9:00 மணிக்கு சுவாமிக்கு வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. காலை, 10:00 மணிக்கு, நல்லெண்ணெய், பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதணை காட்டப்பட்டது. புரட்டாசி ஞாயிற்றுக்கிழமை மற்றும் மஹாளய அமாவாசை என்பதால் வழக்கத்தை விட, நேற்று ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை