உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாணவர்கள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கை கவனமாக கையாள கூடுதல் எஸ்.பி., அறிவுரை

மாணவர்கள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கை கவனமாக கையாள கூடுதல் எஸ்.பி., அறிவுரை

நாமக்கல், ''மாணவர்கள், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவற்றை மிக கவனமாக கையாள வேண்டும்,'' என, சைபர் கிரைம் கூடுதல் எஸ்.பி., விஜயராகவன் பேசினார்.நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளை மற்றும் நாமக்கல் மாவட்ட யூத் ரெட் கிராஸ் சார்பில், மாவட்ட அளவிலான தன்னார்வலர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது. கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் செயலாளர் ராஜேஸ்கண்ணன் முன்னிலை வகித்தார். சேலம் பெரியார் பல்கலை யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் எஸ்.பி., விஜயராகவன் பேசியதாவது:மாணவர்கள், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை மிக கவனமாக கையாள வேண்டும். தேவையின்றி தங்களுடைய புகைப்படங்களை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், சமீபகாலமாக மாணவ, மாணவியருக்கு உதவித்தொகை வழங்குவதாக, 'வாட்ஸாப்' மற்றும் இணையதளம் மூலம் தவறான செய்திகள் அனுப்பப்பட்டு ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அதனால், மாணவ, மாணவியர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.நாமக்கல் மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் வெஸ்லி, மாநில முதலுதவி பயிற்சியாளர் பெஞ்சமின், தன்னார்வ சிகிச்சையாளர் சதீஷ்குமார், நாமக்கல் மாவட்ட மருத்துவ கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் அன்பு மலர், நாமக்கல் மாவட்ட மனநல அலுவலர் இந்துமதி, ரெட் கிராஸ் நாமக்கல் மாவட்ட தலைவர் மாதையன், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர்கள் புவனேஸ்வரி, சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி