உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வருதராஜ பெருமாள் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

வருதராஜ பெருமாள் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

சேந்தமங்கலம்: புரட்டாசி மாத பிறப்பையொட்டி, நைனாமலை வருதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.சேந்தமங்கலம் அருகே மின்னாம்பள்ளியில், பிரசித்தி பெற்ற நைனாமலை வருதராஜ பெருமாள் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் உற்சவ திருவிழா நான்கு வாரங்கள் நடப்பது வழக்கம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள், வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை மதியம் வரை, பெருமாளை தரிசனம் செய்து விட்டு செல்வர். தென் திருப்பதி என்று அழைக்கப்படும் இந்த கோவில், 2,700 அடி உயரத்தில் உள்ளது. அடிவாரத்தில் இருந்து, 3,600 படிக்கெட்டுகளில் ஏரி சென்று வரதராஜ பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.இந் நிலையில் வரும், 17ல் புரட்டாசி மாதம் பிறப்பதால் முதல் வார விரதமான, 21 சனிக்கிழமை அன்று ஏராளமான பக்தர்கள், கோவிலுக்கு வந்து அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயர், மலையில் உள்ள வரதராஜ பெருமாளை தரிசனம் செய்து விட்டு விரதத்தை துவக்குவர். இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில், முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயரை தரிசனம் செய்து விட்டு, மலைக்கு ஏறும் வழியில் உள்ள படிக்கட்டுகளை துாய்மைப்படுத்தி, வர்ணம் பூசும் பணிகள் நடந்து முடிந்துள்ளது. இரவு நேரத்தில் மலை ஏறி செல்வதால், மலைப்பாதை முழுவதும் மின்விளக்குகளை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. மேலும் அடிவாரம் மற்றும் மலை உச்சியில் பக்தர்களின் தேவைக்கான கழிப்பறைகள், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், பக்தர்களின் பாதுகாப்பிற்காக வெப் கேமர மூலம் கண்காணிக்கப்படும் என, செயல் அலுவலர் கீர்த்தனா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி