உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பி.எம். கிசான் நிதியை தொடர்ந்து பெற ஆலோசனை

பி.எம். கிசான் நிதியை தொடர்ந்து பெற ஆலோசனை

நாமகிரிப்பேட்டை, நாமக்கல் மாவட்ட வேளாண் துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:நாமக்கல் மாவட்டத்தில் பி.எம்., கிசான் திட்டத்தில், சந்தேகத்தின் அடிப்படையில் பயனாளிகளின் நிதி பலன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2019 ஆண்டுக்கு பின் மரபுரிமை தவிர நில பரிமாற்றம் செய்த, 951 பேர், தற்போதைய மற்றும் முந்தைய நில உரிமையாளர் இருவர், பண பலன் பெற்று வரும், 458 பேர், வலைதளத்தில் முழுமையற்ற முந்தைய உரிமையாளர் விபரங்கள் என, 3,346 பேர் என மொத்தம், 4,757 பேருக்கு நிறுத்தப்பட்டுள்ளது.பி.எம். கிசான் பயனாளிகள் தங்களது சரியான சுய ஆவணங்கள் மற்றும் நில ஆவணங்களை வலைதளத்தில் இ.சேவை மையம் மூலம், பதிவேற்றம் செய்தால் மட்டுமே அடுத்த, 21வது தவணை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். பதிவு செய்பவரின் ஆதார் எண், ரேஷன் கார்டு, பதிவு செய்பவரின் கணவன் அல்லது மனைவி ஆதார் எண், முந்தைய நில உரிமையாளரின் ஆதார் எண் மற்றும் இறப்பு சான்றிதழ், ஆதார் என்னுடன் இணைத்த அலைபேசி எண், பதிவு செய்பவரின் நில ஆவணங்கள், கணினி சிட்டா அல்லது தாய் பத்திரம் ஆகிய அனைத்து ஆவணங்களும் இருந்தால் மட்டுமே வலைதளத்தில் முழுமையாக பதிவேற்றம் செய்ய முடியும். நிதி நிறுத்தப்பட்ட விவசாயிகள், இ.சேவை மையத்தில் பதிவு செய்ய வேண்டும். மேற்கண்ட விவசாயிகள் எப்.ஆர். ஐ.டி., பெற்றிருந்தால் மட்டுமே வலைதளத்தில் பதிவு மேற்கொள்ள இயலும்.இவ்வாறு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை