உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புங்கம் புண்ணாக்கு பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை

புங்கம் புண்ணாக்கு பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புங்கம் புண்ணாக்கில் நைட்ரஜன், -5.1 சதவீதம், பாஸ்பரஸ், -1.1 சதவீதம், பொட்டாஷ்,- 1.3 சதவீதம், சோடியம் ஆக்ஸைடு, 0.8 சதவீம் உள்ளது. கரும்பு பயிருக்கு புண்ணாக்கை சிறப்பு உரமாக உபயோகிக்கலாம். அதனால் சிவப்பு எறும்புகளின் தொல்லையும் இருக்காது. அனைத்து பயிர்களுக்கும், 50 முதல், 60 கிலோ புங்கம் புண்ணாக்கை வயலில் இடலாம்.காப்பி செடிகளுக்கும், தக்காளிக்கும் புங்கம் புண்ணாக்கை உரமிட்டால், நுாற்புழுக்களின்- குறிப்பாக வேர் முடிச்சுகளை ஏற்படுத்தும் இனத்தின் தாக்கம் குறையும். யூரியா, அம்மோனியம் சல்பேட் ஆகியவற்றுடன் புண்ணாக்கையும் கலந்து உரமிட்டால், இந்த உரங்கள் நைட்ரேட்டாக மாறாமல், அம்மோனிய சத்தாக நீண்ட நாட்கள் நிலைக்கும்.யூரியா உரத்தை அம்மோனிய உரமாக மாற்றும் யூரியேஸ் என்ற என்ஸைம், புண்ணாக்கில் உள்ளது. அதிகமாக நீர் வடியும் இடங்களில், புண்ணாக்குடன் யூரியாவை கலந்து உரமிட்டால், உரச்சத்து வீணாவது குறையும். புண்ணாக்கிலுள்ள புரதப்பகுதியை சோடியம் கார்பனேட் மூலம் தனித்து பிரித்து, ஒட்டுப்பசை தயாரிக்கலாம். இப்பசையை பூச்சிக்கொல்லி ரசாயனங்களுடன் கலந்து தெளித்தால், பூச்சிக்கொல்லி நன்கு செடிகளில் பரவி ஒட்டிக்கொள்ளும். இதனால் பூச்சிக்கொல்லியின் திறனும் அதிகரிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ