18 வயது நிறைவடைந்தோ: விடுபடாமல் வாக்காளர் பட்டியலில் சேர்க்க அறிவுரை
நாமக்கல்: ''18 வயது நிறைவடைந்த தகுதியான ஒரு வாக்காளர் கூட விடு-படாமல், வாக்காளர் பட்டியலில் இடம்பெற செய்ய வேண்டும்,'' என, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான துர்கா மூர்த்தி கூறினார்.வரும், 2026 ஜன., 1ல், 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், அதா-வது, 2007 டிச., 31 அன்றோ, அதற்கு முன்னரோ பிறந்தவர்கள், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ளாத-வர்கள், தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்க வேண்டும்.தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் எஸ்.ஐ.ஆர்., படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கி, நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று பி.எல்.ஓ., ஆப் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.சிறப்பு தீவிர திருத்தம்--2026ன் தொடர்ச்சியாக, இளம் வாக்கா-ளர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கையாக, 18 வயது பூர்த்தி அடையும் இளம் வாக்காளர்களிடம், படிவம்-6-ஐ பெற்று, தொடர்புடைய பாகம் எண்ணில் சேர்க்கும் நடவடிக்கை, சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் மேற்-கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாமக்கல் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செல்வம் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த முகாமை, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டரு-மான துர்கா மூர்த்தி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறியதாவது:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிக-ளிலும், 18 வயது நிறைவடைந்த தகுதியான ஒரு வாக்காளர் கூட விடுபடாமல், வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்-கொள்ள வேண்டும்.மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லுாரிகளில் பயின்று வரும், 18 வயது பூர்த்தியடைந்த, இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத இளம் வாக்காளர்களுக்கு, கல்-லுாரி வளாகங்களிலேயே, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் மூலம் படிவம்-6-ஐ வழங்கி, பூர்த்தி செய்-யப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு வருகி-றது. கல்லுாரி மாணவ, -மாணவியர் இந்த வாய்ப்பை பயன்படுத்-திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஆர்.டி.ஓ., சாந்தி, ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்-கண்ணன், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்-பட பலர் பங்கேற்றனர்.