உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விவசாய தொழிலாளர் சங்க அமைப்பு கூட்டம்

விவசாய தொழிலாளர் சங்க அமைப்பு கூட்டம்

எலச்சிபாளையம், எலச்சிபாளையம் யூனியன், 85.கவுண்டம்பாளையத்தில், நேற்று தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க கிளை அமைப்பு கூட்டம் நடந்தது. இதில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.தொடர்ந்து, நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு, மத்திய அரசு, 200 நாள் வேலை வழங்க வேண்டும். இப்பணிக்கு, இந்தியா முழுவதும், 4 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தீபாவளி போனஸ், 5,000 ரூபாய் வழங்க வேண்டும். வீட்டுமனை இல்லாத குடும்பங்களுக்கு குடியிருக்கும் கிராமத்தில் வீட்டுமனை ஒதுக்க வேண்டும். நுாறு நாள் வேலை செய்யும் பணித்தளத்தில் விபத்து அல்லது விஷக்கடி ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் தொழிலாளர் குடும்பங்களுக்கு, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்., 7ல், தமிழகம் முழுவதும் உள்ள கலெக்டர், ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் முன்பாக நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி