உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முன்னாள் அமைச்சரின் பேனர் கிழிப்பு அ.தி.மு.க.,வினர் போலீசில் புகார்

முன்னாள் அமைச்சரின் பேனர் கிழிப்பு அ.தி.மு.க.,வினர் போலீசில் புகார்

ப.பாளையம் :பள்ளிப்பாளையத்தில், முன்னாள் அமைச்சர் தங்கமணியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை மர்ம நபர்கள் கிழித்ததால், அக்கட்சியினர் போலீசில் புகாரளித்துள்ளனர்.பள்ளிப்பாளையம் நகராட்சியில் டி.வி.எஸ்., மேடு, சந்தைப்பேட்டை, தான்தோன்றி முருகன் கோவில் பகுதி, தில்லை நகர் ஆகிய இடங்களில், அ.தி.மு.க., சார்பில் திட்டப்பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் தங்கமணி, பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு, அ.தி.மு.க., சார்பில் நான்கு இடங்களில், முன்னாள் அமைச்சர் தங்கமணியை வரவேற்று பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர்.இதில், சந்தைப்பேட்டை, தான்தோன்றி முருகன் கோவில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் தங்கமணியின் படத்தின் மீதே கிழித்துள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த அக்கட்சியினர், நேற்று மதியம் பள்ளிப்பாளையம் நகர அ.தி.மு.க., செயலாளர் வெள்ளிங்கிரி தலைமையில், பள்ளிப்பாளையம் போலீசில் புகாரளித்தனர். புகார்படி, சந்தேக நபர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ