எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அ.தி.மு.க.,வினர் மரியாதை
நாமக்கல்: எம்.ஜி.ஆரின், 38ம் ஆண்டு நினைவு நாளை-யொட்டி, நாமக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு, அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நாமக்கல்-பரமத்தி சாலை, மாநகராட்சி செலம்ப கவுண்டர் பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, முன்னாள் எம்.எல்.ஏ.,வும், நகர செய-லாளருமான பாஸ்கர் தலைமையிலான அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்தும், மலர் துாவியும் அஞ்சலி செலுத்தினர். இதேபோல், சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டியில், முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரசேகரன், திருச்செங்-கோட்டில், அ.தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் பொன்சரஸ்வதி, ராசிபுரத்தில், முன்னாள் அமைச்சர் சரோஜா, தலைமையில் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மவுன ஊர்-வலம் சென்றனர். பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்டில், முன்னாள் அமைச்சர் தங்கமணி மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, ஆவாரங்காடு பகுதி வரை மவுன ஊர்வலம் சென்றனர்.