உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அ.தி.மு.க., தெருமுனை பிரசாரம்

அ.தி.மு.க., தெருமுனை பிரசாரம்

திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க., அம்மா பேரவை, திருச்செங்கோடு தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், அ.தி.மு.க., ஆட்சியின் சாதனை, தி.மு.க., ஆட்சியின் அவலங்களை எடுத்துக்கூறி தெருமுனை பிரசாரம் நடந்தது. நாமக்கல் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வக்கீல் சந்திரசேகர் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு வீடாக சென்று துண்டு பிசுரம் வழங்கி பேசினார்.அப்போது, தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கு, சிவகங்கை போலீஸ் ஸ்டேஷனில் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவமே சாட்சியாக உள்ளது.இந்த நிலை மாறி, நல்லாட்சி நடக்க வரும் தேர்தலில், அ.தி.மு.க.,வை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் எனக்கூறினார். முன்னாள் அமைச்சர் சரோஜா, மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் பரணிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ