கழிவுநீரால் சேறு, சகதியாக மாறிய பாசன வாய்க்கால்
பள்ளிப்பாளையம் :பள்ளிப்பாளையம் அருகே, சின்னகவுண்டம்பாளையம் பகுதியில் மேட்டூர் கிழக்குகரை வாயக்கால் செல்கிறது. கடந்தாண்டு ஆக., முதல் ஜன., வரை, இந்த வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் வந்தது. கடந்த, ஐந்து மாதங்களாக தண்ணீர் வராததால், வாய்க்காலில் முட்புதர் வளர்ந்து காணப்பட்டது. இதை நீர்வளத்துறை அதிகாரிகள், கடந்த சில நாட்களுக்கு முன் அகற்றினர். முட்புதரை அகற்றியபின், வாய்க்காலை பார்த்தபோது குடியிருப்பு கழிவுநீர் அதிகளவு தேங்கி காணப்பட்டது. மேலும், கழிவுநீரால் சேறு, சகதியாக மாறி காணப்பட்டது. இதையடுத்து, நேற்று சிறிய பொக்லைன் இயந்திரம் மூலம் பாசன வாய்க்காலில் இருந்த கழிவுநீர், சேறு, சகதிகளை அகற்றும் பணி நடந்தது.