ஆனங்கூர் ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக மூடல்
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, வெப்படையில் இருந்து- திருச்செங்கோடு செல்லும் வழித்தடத்தில், ஆனங்கூர் பகுதியில் ரயில்பாதை செல்கிறது. இந்த ரயில் பாதையை கடந்து தான் வாகனங்கள் செல்ல வேண்டும். இந்த சாலை வழியாக, தினமும் பஸ், லாரி, கார், கல்லுாரி வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரயில் பாதையில், 'கேட்' அமைக்கப்பட்டுள்ளது. ரயில் வரும்போது மூடப்பட்டு, பின்னர் திறக்கப்படும். நேற்று பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர். இதுகுறித்து, ஆனங்கூர் பஞ்., முன்னாள் தலைவர் சிங்காரவேலு கூறியதாவது:ஆனங்கூர் ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக, நேற்று காலை முதல் மாலை வரை மூடப்பட்டது. அடிக்கடி பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடப்படுவதால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்த ஆனங்கூர் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க, சில ஆண்டுகளுக்கு முன் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால், மேம்பாலம் அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.