அன்பழகன் பிறந்த நாள் விழா
நாமக்கல், டிச. 20-நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனின், 102 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் ராஜேஸ்குமார் ஆலோசனையின்படி ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் அவரது உருவப்படத்திற்கு கட்சியினர் மலர்துாவி மரியாதை செலுத்தினர். மேலும், கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன .அதேபோல், நாமக்கல்லில் உள்ள கிழக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்த, அன்பழகன் பிறந்த நாள் விழாவில், மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, தெற்கு நகர செயலாளர் ராணா ஆனந்த், மேற்கு நகர செயலாளர் சிவக்குமார், மாநில மகளிர் தொண்டரணி இணை செயலாளர் ராணி மற்றும் கட்சியினர், அவரது படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்துாவியும் மரியாதை செலுத்தினர். ராசிபுரத்தில் புதிய பஸ் ஸ்டாண்டில், நகர செயலாளர் சங்கர் தலைமையில் தி.மு.க., நிர்வாகிகள் அன்பழகன் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான ராஜேஸ்குமார் எம்.பி., மீது மறைந்த அன்பழகன் மிகுந்த அன்பு வைத்திருந்தார். இதையடுத்து அன்பழகன், தன் பேனா ஒன்றை எம்.பி., ராஜேஸ் குமாருக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார். ராஜேஸ்குமார் எம்.பி.,யாக பதவியேற்றபோது அன்பழகன் வழங்கிய பேனாவில்தான், தன் முதல் கையெழுத்தையிட்டார். நேற்று அன்பழகன் பிறந்தநாளில், அவர் வழங்கிய பேனாவில் கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதி நினைவு கூர்ந்தார்.