அன்புமணி பிறந்தநாள் அன்னதானம் வழங்கல்
நாமக்கல், பா.ம.க., தலைவர் அன்புமணி பிறந்தநாளை முன்னிட்டு, நாமக்கல் மத்திய மாவட்டம் சார்பில் அம்மன் கோவிலில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பா.ம.க., தலைவர் அன்புமணி பிறந்த நாளையொட்டி, நாமக்கல் மத்திய மாவட்டம் சார்பில், நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில், மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில், சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்கதர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர் செந்தில், மாவட்ட துணை செயலாளர்கள் பழனிச்சாமி, சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.