உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கருப்பு கொடி ஏற்றி போராட்டம் அறிவிப்பு

கருப்பு கொடி ஏற்றி போராட்டம் அறிவிப்பு

ப.வேலுார், ப.வேலுார் அருகே பொத்தனுார் டவுன் பஞ்சாயத்து ஆறாவது வார்டில் வசிக்கும் மக்கள் சாக்கடை வசதி கேட்டு கோரிக்கை மனுவை டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் அளித்தனர். கடந்த, 21 ஆண்டுகளாக பொத்தனூர் டவுன் பஞ்சாயத்து ஆறாவது வார்டில், 20 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். முறையாக வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தி வருகிறோம். ஆனால் இதுவரை எங்களுக்கு வடிகால் வசதி, கழிவுநீர் வெளியேற சாக்கடை வசதி செய்து தரப்படவில்லை. இதனால் மிகவும் சிரமத்துக்குள்ளாகிறோம். அதனால் சாக்கடை வசதி அமைத்து தரக் கோரி அப்பகுதி பொதுமக்கள் சார்பில் மனு கொடுத்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட டவுன் பஞ்சாயத்து அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது:கழிவுநீர் வெளியேற்ற வழி இல்லாததால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இதனால் இப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது, கடந்த ஐந்து ஆண்டுகளாக வடிகால் வசதி, கழிவுநீர் வெளியேற வசதி கேட்டு 10 க்கு மேற்பட்ட மனுக்களை கொடுத்து வந்துள்ளோம். இதுவரை பொத்தனூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து எங்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லையெனில், தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராடும் சூழ்நிலை ஏற்படும் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை