உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இன்று அன்பழகனின் 102வது பிறந்தநாள் நலத்திட்ட உதவி வழங்க வேண்டுகோள்

இன்று அன்பழகனின் 102வது பிறந்தநாள் நலத்திட்ட உதவி வழங்க வேண்டுகோள்

நாமக்கல்: 'மறைந்த தி.மு.க., பொதுச்செயலாளர் அன்பழகனின், 102வது பிறந்த நாளை முன்னிட்டு, கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்' என, நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், அன்பழகனின், 102வது பிறந்த நாளை, இன்று (டிச., 19), காலை, 10:00 மணிக்கு, கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்படுகிறது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகிக்கிறார். எம்.எல்.ஏ., ராம-லிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவக்குமார் ஆகியோர் முன்-னிலை வகிக்கின்றனர்.தொடர்ந்து, பேராசிரியர் அன்பழகன் படத்-திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்படுகிறது. மாவட்ட, நகர நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், கவுன்சிலர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். மேலும், நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, டவுன் பஞ்.,களில் உள்ள அனைத்து இடங்களிலும், அன்பழ-கனின் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தி, கட்சி மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை