உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு பள்ளியில் கலைத்திருவிழா

அரசு பள்ளியில் கலைத்திருவிழா

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் ஒன்றியத்தில், 1 முதல், பிளஸ் 2 வரையிலான அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு, கடந்த, 23 முதல் கலைத்திருவிழா போட்டி நடந்து வருகிறது. குறுவள மைய அளவிலான இப்போட்டி, வேலகவுண்டம்பட்டி, மாணிக்கம்பாளையம், உலகப்பம்பாளையம், இலுப்புலி, எலச்சி-பாளையம், பெரியமணலி ஆகிய மேல்நிலை பள்ளிகளில் நடந்-தது. இக்கலைத்திருவிழா போட்டி மூலம் எலச்சிபாளையம் ஒன்-றியத்தில் உள்ள, 77 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், 1,186 மாணவர்கள் தங்களது கலைத்திறன்களை வெளிப்படுத்தினர். வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகளுக்கான ஏற்பா-டுகளை, எலச்சிபாளையம் வட்டார கல்வி அலுவலர்கள், வட்-டார வளமைய மேற்பார்வையாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், தொடக்கநிலை, நடு-நிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ