உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கைவினைஞர் முன்னேற்ற கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கைவினைஞர் முன்னேற்ற கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், கைவினைஞர்கள் முன்னேற்ற கட்சி சார்பில், பழைய பஸ் ஸ்டாண்ட் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி செயலாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். கைவினைஞர் முன்னேற்ற கட்சி தலைவர் பாலு பங்கேற்றார். மாவட்டங்களில் உள்ள அரசு இசை கல்லுாரிகளுக்கு, தியாகராஜ பாகவதர் பெயர் வைக்க வேண்டும். அரசு இசை பள்ளிக்கு தியாகராஜ பாகவதர் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை