மேலும் செய்திகள்
கிள்ளையில் மா.கம்யூ., மாநாடு
29-Oct-2024
ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சிறப்பு கூட்டம்
01-Nov-2024
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் பஸ் ஸ்டாப்பில், நேற்று மாலை, மா.கம்யூ., சார்பில், ஒன்றியக்குழு உறுப்பினர் ஈஸ்வரன் தலைமையில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடந்தது. அதில், மல்லசமுத்திரம் யூனியன், மொஞ்சனுார் கிராமத்தில், அசாம் மாநில தொழிலாளர்கள், 5 பேரை அடைத்து வைத்து, சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், பணம், மொபைல் போன்களை பறித்துக்கொண்டுள்ளனர். தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களிடம் பறிக்கப்பட்ட பணம், மொபைல் போனை திருப்பி தர வேண்டும் என, வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி, ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம், பழனியம்மாள், கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அசாம் மாநில தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
29-Oct-2024
01-Nov-2024