உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டத்தில், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் உமா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., உதவிகளை வழங்கினர். மழையினால் வீடுகள் சேதமடைந்த பயனாளிகளுக்கு வீடுகளை சீரமைக்க, 10 நபர்களுக்கு தலா, 4,000 ரூபாய் மற்றும் ஒரு நபருக்கு, 8,000 ரூபாய்- என மொத்தம், 48,000 ரூபாய் நிவாரண உதவித்தொகை, 10 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ உப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய், 1 பாக்கெட் பிஸ்கட், 1 பாக்கெட் பிரட், 1 பெட்டி மளிகை பொருட்களின் தொகுப்பு, 2 சேலை, 2 வேட்டி, 1 பெட்டி பாத்திரங்கள், 1 பாய், போர்வை, கம்பளி, கொசுவலை, படுக்கை விரிப்பு மற்றும் 1- வாளி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். * கன மழையால் பாதிக்கப்பட்ட தர்மபுரி, கிருஷ்ணகிரி மக்களுக்கு அரிசி, எண்ணெய், சர்க்கரை, பால் பவுடர், டீ துாள், உப்பு, பிஸ்கட், சோப்பு உள்ளிட்ட ஐந்து லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்களை, பள்ளிப்பாளையம் நகராட்சி தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் பாலமுருகன், நகராட்சி கமிஷனர் தயாளன் ஆகியோர் லாரி மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் நகராட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கிய தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு நகராட்சி சார்பாக நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை