உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தமிழ் வளர்ச்சி மன்றம் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ் வளர்ச்சி மன்றம் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: தமிழக அரசு, தமிழ் வளர்ச்சி மன்றம் ஏற்படுத்த வேண்டும் எனக்கோரி, பாரத வெண்புறா கலை இலக்கிய பேரவையினர், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிறுவன தலைவர் கதிர்வேலு தலைமை வகித்தார்.அதில், மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், அரசு தமிழ் வளர்ச்சி மன்றம் ஏற்படுத்த வேண்டும். தமிழ்மொழி வளர்ச்சிக்காக செயல்பட்டு வரும் அனைத்து மன்றங்களையும், மாவட்ட அரசு தமிழ் வளர்ச்சி மன்றத்தில் இணைத்து உரிய அங்கீகார சான்றிதழ் வழங்க வேண்டும்.தமிழ்மொழி இலக்கியவாதிகள், படைப்பாளர்கள், கவிஞர்கள் அனைவரையும் உறுப்பினராக்கி, அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்பட, 11 கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாவட்ட தலைவர் தங்கவேல், செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் அய்யமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை