உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பாதுகாப்பான ரயில் பயணம் கல்லுாரியில் விழிப்புணர்வு

பாதுகாப்பான ரயில் பயணம் கல்லுாரியில் விழிப்புணர்வு

நாமக்கல், நாமக்கல்-மோகனுார் சாலையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியின் சாலை பாதுகாப்பு மன்றம், உள் தர உறுதி மையம் மற்றும் சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை சார்பில், பாதுகாப்பான ரயில் பயணம் -குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொ) ராஜேஸ்வரி தலைமை வகித்தார்.சேலம் புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கோயா, ரயில்வே துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும், ரயிலில் பயணம் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள், ரயில்வே சேவையை, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எவ்வாறு நாம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விரிவாக கூறினார். கரூர், ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.ஐ., நாயுடு, நாமக்கல் ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.ஐ., குமரேசன் ஆகியோர், ரயில் பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். நாமக்கல், கரூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், கல்லுாரி விலங்கியல் துறை தலைவர் ராஜசேகர பாண்டியன், பொருளியல் துறை தலைவர் மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, கல்லுாரி சாலை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை