உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனங்கள், நாமக்கல் மாவட்ட போலீசார் இணைந்து, போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை நடத்தின. முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு கொடியசைத்து துவக்கி வைத்தார். 10 கி.மீ., ஓட்டம் திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே துவங்கியது. 5 கி.மீ., ஓட்டம், ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே துவங்கியது. 2.5 கி.மீ., மற்றும் ஒரு கி.மீ., ஓட்டம், கே.எஸ்.ஆர்., கல்வி வளாகத்தில் துவங்கியது. போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு, கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனங்களில் பரிசளிப்பு விழா நடந்தது. தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன், மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மதுராசெந்தில், எம்.பி., மாதேஸ்வரன், முன்னாள் எம்.பி., சின்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் டி.ஜிபி., சைலேந்திரபாபு, வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !