100 சதவீதம் ஓட்டுப்பதிவுக்கு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
நாமக்கல்:வரும், 2026ல் நடக்க உள்ள தமிழக சட்டசபை தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டுப்போடுவதன் முக்கியத்துவம் குறித்து, மே, 1ல், தொழிலாளர் தினத்தன்று விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ள, தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி, நாமக்கல் பூங்கா சாலையில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டுப்போடுவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து உறுதிமொழி வாசித்தார். அவற்றை ஏராளான கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர். நாமக்கல் ஆர்.டி.ஓ., சாந்தி, தொழிலாளர் நல உதவி ஆணையர் இந்தியா, துறை அலுவலர்கள், கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.