மேலும் செய்திகள்
ஆயுத பூஜையை முன்னிட்டு வாழைத்தார் விலை உயர்வு
09-Oct-2024
வாழைத்தார் விலை சரிவு: விவசாயிகள் கவலைப.வேலுார், அக். 17--நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அதன் சுற்றுவட்டாரங்களான, பரமத்தி, பொத்தனூர், நன்செய் இடையாறு உள்ளிட்ட காவிரிக் கரையோர கிராமங்களில், 1,000 ஏக்கர் பரப்பளவில், வாழை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூவன், ரஸ்தாளி, கற்பூரவல்லி,மொந்தன் உள்ளிட்ட வாழை ரகங்கள் பயிரிடப்படுகிறது. அறுவடை செய்யப்படும் வாழை, ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தினசரி வாழை மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு வரும் வியாபாரிகள், வாழைக்கு விலை நிர்ணயம் செய்து எடுத்துச் செல்வர். இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா ,கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.இந்நிலையில், கடந்த வாரம், 800 ரூபாய்க்கு, ஒரு தார் பூவன் வாழை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது, அதிகபட்சமாக,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல், 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு தார் ரஸ்தாளி ரக வாழை, தற்போது, 350 ரூபாயாக குறைந்துள்ளது. அதுபோல், 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு தார் கற்பூரவல்லி, ரக வாழை, தற்போது, 300 ரூபாயாக குறைந்துள்ளது. 10 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்பட்ட ஒரு மொந்தன் காய் ஒன்று, தற்போது, 5 ரூபாயாக குறைந்துள்ளது.திருமணம்,பண்டிகை சீஸன் இல்லாததே, இதற்கு முக்கிய காரணம் என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தீபாவளி பண்டிகை வரை, வாழைத்தார் விலையில் சரிவு இருக்கும். அதன் பின்னரே விலையேற்றம் காணும் என, விவசாயிகள் தெரிவித்தனர். வாழைத்தார் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் சரிவு, விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது.
09-Oct-2024