மேலும் செய்திகள்
அரசூரில் 65ம் ஆண்டு தேர் உத்சவம் விமரிசை
23-May-2025
திருச்செங்கோடு, திருச்செங்கோடு மலைக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் அர்த்தநாரீஸ்வரர், தேரில் பவனி வரும் வைகாசி விசாக தேர் திருவிழா, வரும் ஜூன், 1ல் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இதன் முதல் நிகழ்வாக, பத்ரகாளியம்மன் என அழைக்கப்படும் அழகு நாச்சியம்மன் திருத்தேரை, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அமாவாசை திதி அன்று, கிருத்திகை நட்சத்திர நாளில் தேரோட்டம் நடப்பது வழக்கம். பாரம்பரியமாக அமாவாசை அன்று நடு இரவில் நான்கு ரத வீதி விளக்குகள் அணைக்கப்பட்டு தேரோட்டம் நடைபெறும்.இதனால் பக்தர்கள் இருட்டு தேர் என அழைப்பர். நாளடைவில் மருவி, திருட்டு தேர் என அழைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக அரசு உத்தரவால், இருளில் இழுக்கப்பட்டு வந்த அம்மன் தேர், மாலையில் வெளிச்சத்தில் இழுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
23-May-2025