சுகாதார மையம் கட்ட பூமி பூஜை
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, கபிலர்மலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்குள், 15வது நிதிக்குழு சுகாதார மானிய திட்-டத்தின் கீழ், வட்டார அளவிலான பொது சுகாதார மைய கட்-டடம் கட்ட, பூமி பூஜை நேற்று நடந்தது. ஆதிதிராவிடர் நலத்-துறை அமைச்சர் மதிவேந்தன், பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். கபிலர்மலை வட்டார அட்மா குழு தலைவர் சண்முகம், ப.வேலுார் தாசில்தார் முத்துக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், சுகாதாரத்துறை டாக்டர்கள், மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல், பாண்டமங்கலம் மாரியம்மன் கோவில் அருகே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜையும், பூங்கா திறப்பு விழா பூஜையும், வெடியரசன் பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்-டட திறப்பு விழா நிகழ்ச்சியும், இதே பகுதியில் ரேஷன் கடை திறப்பு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா, நேற்று நடந்தது.